திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் திருவிழாவில் நடனம் ஆடி அசத்திய கலெக்டர் மனைவி மற்றும் அரசு பெண் அதிகாரிகள்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தலைமையில் தலைமையில் சமத்துவ பொங்கல் அரசு அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.

இந்த திருவிழாவில் மாடஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது தப்பாட்ட கலைஞர்கள் அடித்த அடியில் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா மனைவி ஷீவாலிக்கா மற்றும் அரசு பெண் அதிகாரிகள் உள்ளிட்டோர் நடனமாடி அசத்தினர். இந்த நிகழ்வு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
-மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment