அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் காங்கிரஸ் பொறுப்பாளராக Dr. ஜானி ஜாவித் நியமனம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 8 April 2023

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் காங்கிரஸ் பொறுப்பாளராக Dr. ஜானி ஜாவித் நியமனம்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறையின் சார்பில் தமிழகத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரும், திருப்பத்தூர் ஒன்றிய காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான முனைவர் திரு ஜானி ஜாவித் அவர்கள் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் சிறுபான்மை துறையின் பொறுப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதலின் அடிப்படையில், எதிர் நோக்கி இருக்கும் 2024 பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சியில் தேசிய அளவில் பல மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறையின் தலைவரும் ராஜ்ய சபா எம். பி-யுமான திரு.இம்ரான் பிரதாப்கரி அவர்கள் ஜானி ஜாவித் அவர்களை அந்தமான் மற்றும் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தின் பொறுப்பாளராக நியமித்து அவசர ஆணை பிறப்பித்துள்ளார்.

மேலும் காங்கிரஸ் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்கள் மேற்கொண்டு வெற்றியடைந்த பாரத் ஜோடோ யாத்திரையின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறையின் சார்பில்  தமிழக ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு மிகச் சிறப்பாக செயல்பட்டமைக்காகவும், 2022 குஜராத் சட்டமன்ற தேர்தல்  பார்வையாளராக ராஜ்கோட் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டு அங்கும்  தன் களப்பணியை   சிறப்பாக செய்து முடித்த காரணத்தினால் இந்த பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/