ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் அனுமதி பெற்று இந்திய தேசத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவை நோக்கி சென்று வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் வாணியம்பாடி ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 332 இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரைக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.


இதனைத் தொடர்ந்து அவர்கள் எந்த விதமான உடல் தொந்தரவுகள் இன்றி ஆரோக்கியமாக சென்று திரும்பி வரும் வகையில் தமிழ்நாடு ஹஜ் சேவை சங்கம் மேற்பார்வையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக ஹஜ் யாத்திரை சிறப்பு தடுப்பூசி முகம் ஏற்பாடு செய்யப்பட்டு 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூளைக்காய்ச்சல் போலியோ இன்புளுயன்சா உள்ளிட்ட மூன்று தடுப்பூசிகளும் 65 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மூளை காய்ச்சல் மற்றும் போலியோ என இரண்டு தடுப்பூசிகளும் போடப்பட்டன.
இந்நிகழ்வின் போது தலைமை மருத்துவ அலுவலர் சிவகுமார் சுகாதாரத்துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment