திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெரிய கசநாயக்கன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1500 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் இந்நிலையில் இன்று குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு அப்பள்ளியில் நடனம் நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது மேலும் முன்னாள் பாரத பிரதமர் நேருவின் பிறந்தநாளையே குழந்தைகள் தினமாக கொண்டாடபடுவது குறித்தும் நேருவின் பெருமைகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் பள்ளி மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன, இதைத்தொடர்ந்து பள்ளியில் படிக்கும் 1500 மாணவ மாணவியருக்கு தலைமை ஆசிரியர் குழந்தைசாமி மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தங்களுடைய சொந்த செலவில் பிரியாணி முட்டை மற்றும் வாழைப்பழம் உள்ளிட்ட மதிய விருந்து அளித்தனர்.
விழாவின் நிறைவில் பள்ளி மாணவ மாணவியர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர், தாங்கள் பணி புரியும் அரசு பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு தங்களுடைய சொந்த செலவில் பிரியாணி விருந்து கொடுத்து அசத்திய ஆசிரியர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி மகிழ்ந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment