இந்த கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு சட்டவிரோதமான 12 மணி நேர வேலை நேரம் கைவிடப்பட்டு, சட்டப்படியான 8 மணி நேர வேலை வழங்கி மூன்று ஷிப்ட் முறையில் 24×7 ஆம்புலன்ஸ் இயக்கப்பட வேண்டும், தமிழகம் முழுவதும் தொழிலாளர்களின் வார விடுமுறை நாட்களில் ஆள் பற்றாக்குறையை காரணம் காட்டி இயக்கப்படாமல் நிறுத்தப்படும் 108 ஆம்புலன்ஸ்களை தங்கு தடையின்றி 24×7 இயக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அனைத்து ஊர்களிலும் தொழிலாளர்களுக்கு ஓய்வறை மற்றும் கழிப்பறை வசதிகள் இன்றி அவதிப்படுகின்றனர் அவர்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றவும் இந்த தயாரிப்பு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படாவிடில் வருகின்ற ஜனவரி 8.1.2024 அன்று வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தனர் என்று குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment