திருப்பத்தூரில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது மனைவி இருவரையும் நூதனமான முறையில் ஏமாற்றி 6 லட்சத்து 75 ஆயிரம் செக் மோசடி செய்த நபர்! பணத்தை மீட்டு தர கோரிக்கை. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 25 December 2023

திருப்பத்தூரில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது மனைவி இருவரையும் நூதனமான முறையில் ஏமாற்றி 6 லட்சத்து 75 ஆயிரம் செக் மோசடி செய்த நபர்! பணத்தை மீட்டு தர கோரிக்கை.


திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த சாமநகர் பகுதியில் வசித்து வரும் அரவிந்தன் (47) இவருடைய மனைவி பிரியா (32). அரவிந்தன் இவர் கூடப்பட்டு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக 2017-2020 ஆம் ஆண்டு பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கூடப்பட்டு- காக்கண்ணாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த (லேட்) மகாதேவன் மகன் சுரேஷ், வயது 30 இவர் கூடப்பட்டு கிராம நிர்வாக அலுவலகம் முன்பு அவரது மனைவி அருணா என்பவர் பெயரில் கணினி மையம் நடத்தி வந்தார்.

இதன் காரணமாக கிராம நிர்வாக அலுவலர் அரவிந்தனுக்கும் சுரேஷ்க்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக சுரேஷ் எனது தந்தை இறந்துவிட்டதாகவும் நான் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். எனவே நீங்கள்   கோச் பஸ் எடுத்து கொடுத்தால் நான் டிரைவராக பணியாற்றி பிழைத்துக் கொள்வேன் எனக் கூறியுள்ளார்.


இதனை நம்பிய கிராம நிர்வாக அலுவலர் தன்னுடைய மனைவி பிரியாவின் பெயரில் கோச் பஸ் எடுக்க முடிவு செய்துள்ளார். இதன் காரணமாக  திருப்பத்தூரில் கோச் பஸ் செகண்ட்ஸில் உள்ளது, எனவே  கோச் பஸ் எடுக்க சோழா தனியார் நிதி நிறுவனத்தில் லோன் தருவதாக சுரேஷ் கூறவே அவரை நம்பி திருப்பத்தூர் பெடரல் வங்கி கிளையில் புதிய வங்கி கணக்கினை பிரியா பெயரில் தொடங்கிடமுடிவு செய்தனர். 


2018 அக்டோபர் 31ஆம் தேதி வங்கி கணக்கு தொடங்கிட உதவி செய்வதாக கூறி அன்று  பெடரல் வங்கியில் சுரேஷ் என்பவர் பிரியாவின் பெயரில் உள்ள  காசோலை புத்தகம் ஒன்றினை வாங்கி உள்ளார். அப்போது கணக்கு தொடங்குவது தொடர்பாக வங்கி மேலாளர் கேட்கிறார் எனக் கூறி இரண்டு காசோலை ரசீதுகளை எடுத்துக்கொண்டு அதில் முதல் காசோலை ரசீதினை அப்போதே ஆயிரம் ரூபாய் வங்கிகணக்கு தொடங்கிட பயன்படுத்தியுள்ளார்.


இந்த நிலையில் இரண்டாவது காசோலையை மறைத்து வைத்துக் கொண்டு அவருடைய மனைவி அருணா என்பவர் பெயரில் கடந்த 23.02.2023 ஆம் தேதி மோசடியில் ஈடுபட்டு 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை எடுத்துள்ளார். ஆனால் இதுவரை தனது மனைவி பெயரில் வங்கி கணக்கில் இருந்த பணம் மோசடியாக எடுக்கப்பட்டது குறித்து தெரியாமல் இருந்த கிராம நிர்வாக அலுவலர் அரவிந்தன் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பிள்ளைகளுக்கு இன்சூரன்ஸ் பாலிசி தொகை செலுத்துவது தொடர்பாக  வங்கிக்கு சென்று வங்கி இருப்பு கணக்கினை பார்த்த போது தான் பணம் சுரேஷ் மற்றும் அருணா ஆகியோரால் மோசடியாக எடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.


அதிர்ச்சியடைந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவருடைய மனைவி இதுகுறித்து கடந்த 22.12. 2023 வெள்ளிக்கிழமை  திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  சுரேஷ் - அருணா மீது நடவடிக்கை எடுக்கவும் பணத்தை மீட்டு தரக்கோரியும் புகார் அளித்தார். புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அருணா என்பவர் காக்கணம்பாளையம் ஊராட்சியில் வார்டு உறுப்பினராக  இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கிராம நிர்வாக அலுவலரையே ஏமாற்றி காசோலை மூலமாக பணத்தை எடுத்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/