திருப்பத்தூர் அடுத்த நத்தம் பகுதியில் ஊராட்சி செயலக கட்டிடத்தை காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 December 2023

திருப்பத்தூர் அடுத்த நத்தம் பகுதியில் ஊராட்சி செயலக கட்டிடத்தை காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.


திருப்பத்தூர் மாவட்டம், நத்தம் ஊராட்சிக்கு ஊராட்சி மன்ற கட்டிடம் 40 லட்சம் மதீப்பீட்டில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். 

திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், மாவட்ட திட்ட இயக்குனர் செல்வராசு மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கோட்டாட்சியர் பானு, கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி, மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய மாவட்ட ஆட்சியர் தலைவர் ஊராட்சியில் அனைத்து விதமான வசதிகளுடன் புதியதாக ஊராட்சி செயலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பல்வேறு கட்டமைப்புடன் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 

பெண் கல்வி என்பது மிக முக்கியமானது.  பெண் குழந்தைகளை படிக்க வைப்பதால் நாடு வளர்ச்சி அடையும் என்றார். அடுத்தாக குழந்தை திருமணங்கள் தடுக்க அனைவரும் உறுதி எடுக்க வேண்டும். குழந்தை திருமணங்களால பலவேறு பிரச்சனைகளை  பெண் குழந்தைகள் சந்திக்கச் நேரிடுகிறது. என்றார். குழந்தை திருமணத்தை நடத்துபவர் மற்றும் திருமணத்திற்கு சென்றவர்கள் என அனைவரின் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 


கல்வி ஒருவரின் அறிவை வளர்க்கத் தானே தவிர வேலைக்கு அல்ல‌. அதனால் கல்வி கற்க வேண்டும். பிஸாடிக்கை எரிப்பதால் டையாக்சின் என்கிற ஒரு வித  நச்சு காற்றில் கலக்கிறது. அதனால் மக்களுக்கு மூச்சு தினறல்  ஏற்படும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்றார்‌. அதனால் பிளாஸ்டிக்கை தவிருங்கள். இறுதியாக ரங்கசாமி குமார் நன்றி கூறினார்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/