மேலும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நாட்டில் உள்ள இளைஞர்களிடையே விளையாட்டு கலாச்சாரத்தை வளர்ப்பதற்காகவும் விளையாட்டில் சிறந்து விளங்குவதற்காகவும். மேலும் வீரமங்கை வேலு நாச்சியாரை போற்றும் வகையில் பெண்கள் அனைவரும் பல்வேறு போட்டிகளிலும் வீரத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என நிகழ்ச்சி நடத்தப்பட்டன.
மேலும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன மேலும் மாரத்தான் போட்டி திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி ஆசிரியர் நகர் வரை சென்று திரும்பவும் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்தனர். மேலும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிக்கான விளம்பர வாகனத்தையும் கொடியாசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளர் வெங்கடேசன். துணை அமைப்பாளர் பிரேம் குமார் நகர மன்ற உறுப்பினர்கள் விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரிகள் மற்றும், மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment