திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஸ்டூடன்ட் பவர் ஆப் இந்தியா, நேரு யுவகேந்திரா வேலூர்-திருப்பத்தூர் மற்றும் சேலஞ்ச் பேரா மெடிக்கல் கல்லூரி இணைந்து நடத்திய சமூக சேவை தின சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இரத்த அழுத்தம் மற்றும் சக்கரை நோய் பரிசோதனை செய்து கொண்டனர்.
இதில் ஸ்டூடன்ட் பவர் ஆப் இந்தியா அமைப்பின் சார்பாக மாநிலத் துணைத் தலைவர் S. சூரஜ் பிரசன்னா, மாவட்ட தலைவர் உதய குமார், கல்லூரி முதல்வர் ராஜேஷ், செவிலியர் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களும் கலந்து கொண்டனர். இறுதியில் அமைப்பின் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் P. ரூபின் குமார் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
No comments:
Post a Comment