அரசு நடுநிலை பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பில் வகுப்பறை மற்றும் அங்கன்வாடி மையம் எம்எல்ஏ திறந்து வைத்தார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 10 February 2024

அரசு நடுநிலை பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பில் வகுப்பறை மற்றும் அங்கன்வாடி மையம் எம்எல்ஏ திறந்து வைத்தார்.


திருப்பத்துார் யூனியன், கதிரம்பம்டி பஞ். சீரங்கப்பட்டி அரசு நடுநிலை பள்ளியில் நுாற்றுக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மையம் கட்டித்தர வேண்டும் என திருப்பத்துார் எம்எல்ஏ நல்லதம்பியிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதனைதொடர்ந்து தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.16.5 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறைகள் மற்றும் ரூ.12 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அமுதா தலைமை வகித்தார். திருப்பத்துார் யூனியன் சேர்மன் விஜியா அருணாச்சலம், பிடிஓக்கள் கருணாநிதி, சங்கர் முன்னிலை வகித்தனர். பஞ்.தலைவர் சரஸ்வதி ஜெயக்குமார் வரவேற்றார்.


சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ நல்லதம்பி கலந்துகொண்டு புதிய வகுப்பறை மற்றும் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். இதில் மாவட்ட கவுன்சிலர் சுபாஸ் சந்திரபோஸ், யூனியன் கவுன்சிலர் கலைவாணி, பஞ்.தலைவர் சுரேஷ்குமார், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மாலதி, திமுக நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் தசரதன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/