சு. பள்ளிப்பட்டு பகுதியில் வானவில் மையத்தை திறந்து வைத்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 24 February 2024

சு. பள்ளிப்பட்டு பகுதியில் வானவில் மையத்தை திறந்து வைத்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி.


திருப்பத்தூர் அருகே கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட சு. பள்ளிப்பட்டு பகுதியில் தமிழ்நாடு மாநில ஊரக வளர்ச்சி வாழ்வாதார இயக்கம் மூலம் வானவில் மையத்தை திறந்து வைத்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி.


திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட   சு.பள்ளிப்பட்டு பகுதியில் தமிழ்நாடு மாநில ஊரக வளர்ச்சி வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வானவில் மையத்தினை இன்று திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


மேலும் குழந்தை திருமணம், பாலின கருக்கலைப்பு, பெண்களுக்கான குடும்ப வன்முறை, பாலின வன்முறை உள்ளிட்ட பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் 1091 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் நேரடியாக சென்று உடனடியாக இதற்கு தீர்வு காணப்படும்.


மேலும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்குதல் மற்றும் பாதுகாப்பான சூழலை  உருவாக்கி தருதல் இது தொடர்பாக குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு இந்த   விழிப்புணர்வு ஏற்படுத்தல், மேலும் கிராம பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதற்கு வழிவகை செய்து தருதல், மேலும் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் பாலின கருக்கலைப்பு, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, பாலின வன்முறை போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளுதல், உள்ளிட்ட நோக்கங்களுக்காக தமிழக அரசு இந்த மையத்தை உருவாக்கியுள்ளது.


மேலும் இந்த நிகழ்வின் போது திமுக கட்சியை சேர்ந்த கந்திலி ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ், மாவட்ட கவுன்சிலர் குணசேகரன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன். சீனிவாசன் சு.பள்ளிப்பட்டு பஞ்சாயத்து தலைவர் சைனாஅம்மாள் சுப்ரமணி, கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீனத், ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர் தீபா மேலும் இந்த மாதத்தில் பணிபுரியக்கூடிய மகளிர் அணி பெண்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/