ஆந்திரா அரசு குப்பம் பகுதியில் தடுப்பணை கட்டுவதை கண்டித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தமிழக எல்லையில் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 29 February 2024

ஆந்திரா அரசு குப்பம் பகுதியில் தடுப்பணை கட்டுவதை கண்டித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தமிழக எல்லையில் ஆர்ப்பாட்டம்.


ஆந்திரா மாநிலம் குப்பத்தில் புதிதாக தடுப்பணை கட்ட ஆந்திர அரசின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சமீபத்தில் உத்தரவிட்டுள்ளார். குப்பம் பகுதியில் புதிதாக தடுப்பணை கட்டுவதற்கான நிதியை அம் மாநில அரசு ஒதுக்கி உள்ளது. தடுப்பணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் அவர்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் ஆகவே தமிழக அரசு அதை தடுத்து நிறுத்த வேண்டும். 

ஏற்கனவே தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் ஆந்திர அரசு தடுப்பணை கட்ட முயற்சி செய்து வருகிறது. அதை தடுத்த நிறுத்த வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளோம்.  அந்த மனுவின் மீது தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 


ஆந்திரா தமிழ்நாடு எல்லையான புல்லூர் அருகே வரும் செவ்வாய்க்கிழமை அன்று மிகப்பெரிய போராட்டம் பாலாறு விவசாயிகள் சங்கத்தின் சார்பிலும் மற்றும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி  நாயுடுவின் விவசாயிகள் சங்கத்தின் சார்பிலும் போராட்டம் நடைபெறுகிறது என  மாநில தலைவர் வேலுச்சாமி பேட்டி அளித்தார்.


- செய்தியாளர் கோபிநாத். 

No comments:

Post a Comment

Post Top Ad

*/