திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக GPS கருவி பொருத்தப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களை சுற்றும் காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 5 February 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக GPS கருவி பொருத்தப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களை சுற்றும் காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறையின் தெரிவுநிலையை மேம்படுத்தவும் பெண்கள் உள்ளிட்ட குடிமக்களிடையே அதிக நம்பிக்கையும், நம்பகத் தன்மையையும் ஏற்படுத்தும் முயற்சியாக திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை GPS கருவி பொருத்தப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களை சுற்று காவலர்களுக்கு வழங்கியுள்ளது.

மேலும் இந்த GPS கருவி பொருத்தப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் 24 மணி நேரமும் சுற்றுக் காவலை மேற்கொண்டு சமூக விரோதிகளின் குற்ற செயல்களுக்கு அப்பாவி மக்கள் பாதிப்படையாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பை உறுதி செய்வார்கள்.


மேலும் சுற்றுக்காவலர்கள் மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பெறப்படும் 100 அவசர அழைப்பிற்கு உடனடியாக சம்பவம் இடம் செல்கின்றார்களா, என்பதை குறித்து GPS வாயிலாக கண்காணிக்கப்படுவார்கள் மேலும் அழைப்பவர்களுக்கு பதில் அளிக்கும் நேரத்தை முழுவதுமாக மேம்படுத்த வாய்ப்பாக இந்த GPS கருவி அமைகிறது. மேலும் சுற்று காவலர்களின்ங செயல்பாடுகளை GPS கருவி வாயிலாக மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் சம்பந்தப்பட்ட முகாம் அலுவலகங்களிலும் இருந்து கண்காணிக்கப்படுகிறார்கள்.

 

மேலும் பொது மக்களிடையே பாதிப்பை குறைக்கும் வகையில் இதற்காக பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்களை உள்ளடக்கிய அர்ப்பணிப்பு உள்ள பெண்கள் பீட் மகளிர் காவல் நிலையங ஆய்வாளர்களின் கண்காணிப்பிலும் மற்றும் 3 பீட் அமைப்பு ஆகியவை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. மேலும் 2024 ஆம்ங ஆண்டில் GPS கருவி பொருத்தப்பட்ட வாகனம் கண்காணிப்பை தவிர, மாவட்டம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதை அதிகரிப்பது ,அதிகப் புற காவல் நிலையங்களை துவங்குவது ஆகியவையும் திருப்பத்தூர் மாவட்டம் காவல்துறை திட்டமிடப்பட்டுள்ளது. 


மேலும் 100 அவசர அழைப்புகளுக்கு மாநில அளவில் திருப்பத்தூர் மாவட்டம் 7.40 நிமிடங்களில் சிறந்த பதில் அளிப்பு நேரத்தை கொண்டுள்ளது. மேலும் அழைப்பாளர்களில் 92.6% பேர் காவல்துறையின் பதிலளிப்பு சிறப்பாக உள்ளது என மதிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை 

No comments:

Post a Comment

Post Top Ad

*/