திருப்பத்தூரில் திமுக‌ இளைஞரணி சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 2 March 2024

திருப்பத்தூரில் திமுக‌ இளைஞரணி சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.


திருப்பத்தூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு திமுகவின் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார். 


இதில் திமுகவின் நகர செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் சம்பத்குமார், மோகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தமிழ்மணி, செந்தில், பிரபு. கிரிராஜ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் டி சி கார்த்திநகர இளைஞரணி அமைப்பாளர் மாதேஸ்வரன், நகர  இளைஞரணி துணை கலிபுல்லா. கே பி ஜோதிராஜ். சவுத் அகமத் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.  உதவும் உள்ளங்கள் அமைப்பு உள்ள சுமார் 200 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/