பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் வலைதளம் வாயிலாக சுழற்சி முறையில் பிரித்து அனுப்பும் பணி மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 21 March 2024

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் வலைதளம் வாயிலாக சுழற்சி முறையில் பிரித்து அனுப்பும் பணி மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.


பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்களை  இணையதளம் வாயிலாக  இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வமான வலைதள பக்கத்தில் சுழற்சி முறையில் பிரித்து அனுப்பும் பணி மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் முன்னிலையில் நடைபெற்றது. 

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் முறையே 259, 245, 267 மற்றும் 267 வாக்குச்சாவடிகள் என மொத்தமாக 1038 வாக்குச்சாவடிகள் உள்ளது.   திருப்பத்தூர் மாவட்டத்தில் இருப்பில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2365, கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 1552, மற்றும் விவிபேட்  இயந்திரங்கள் 1650 என மொத்தமாக 5567 இயந்திரங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 1038 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவைப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 1255, கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 1255, மற்றும் விவிபேட் இயந்திரங்கள் 1357 என மொத்தமாக 3867 இயந்திரங்கள் ஆகும். அதன் அடிப்படையில் இன்று அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு செல்ல உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் இணையதளம் வாயிலாக இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வமான வலைதள பக்கத்தில் சுழற்சி முறையில் பிரித்துக் காட்டப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் திறக்கப்பட்டு வலைதள பக்கத்தில் சுழற்சி முறையில் பிரிக்கப்பட்டதன் அடிப்படையில் இயந்திரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பும் பணி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரான தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் , துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கு பெற்றனர்.


- மாவட்ட செய்தியார் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/