வாணியம்பாடி அருகே கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட நபரை பீர் பாட்டிலால், தாக்கியதில் படுகாயம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 31 May 2024

வாணியம்பாடி அருகே கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட நபரை பீர் பாட்டிலால், தாக்கியதில் படுகாயம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரஜினி குமார், இவர் கோவிந்தராஜ் என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் கடனாக கொடுத்துள்ளார், இந்நிலையில் ரஜினி குமார், கோவிந்தராஜிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார், இதனால் கோவிந்தராஜ் நவீன்குமார், மற்றும் வெங்கடேசன் என்ற அடியாட்கள் மூலம் ரஜினிகுமாரை கடந்த 09.05.2024 அன்று பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்.



இந்நிலையில் இதில் படுகாயம் அடைந்த ரஜினி குமார் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில், முக்கவசம் அணிந்து புகுந்த வெளியாட்கள் சிலர் ஆண்கள் வார்ட்டில் சிகிச்சையில் இருந்த ரஜினிகுமாரை வலுகட்டயமாக மருத்துவமனையில் இருந்து வெளியேறும் படி கூறியுள்ளனர்.


இதனால் மிகுந்த பதற்றமடைந்த ரஜினிகுமார் உடனடியாக இதுகுறித்து காவல் அவசர உதவி எண் 100க்கிற்கு அழைத்து புகார் அளித்துள்ளார், அதனை தொடர்ந்து காவல்துறையினர் ரஜினிகுமாரிடம் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர், மேலும் இச்சம்பவம் குறித்து, ரஜினிகுமார் வாணியம்பாடி அரசு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்,


புகாரின் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்க்கொண்டு வரும் நிலையில், ரஜினிகுமாருக்கு மார்பு எலும்பு, உடைந்துள்ள நிலையில், அவரை மேல்சிகிச்சையிற்காக மருத்துவர்கள் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதுகுறித்து வாணியம்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர், சிவசுப்பிரமணியிடம் கேட்டபோது, ரஜினிகுமார், தலை மற்றும் கை, மார்பு பகுதிகளில் பலத்த காயம் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார்,
 

இந்நிலையில் அவரை சிலர் தாக்க முயற்சித்தாக கூறப்படும் நிலையில், ரஜினிகுமாரிடம் இதுகுறித்து புகார் மனு பெறப்பட்டு, மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்க்கொள்ளப்படும் என தெரிவித்தார்..
மாவட்ட செய்தியாளர்.
மோ .அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/