ஜோலார்பேட்டை அருகே 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெற்று வீடு திரும்பிய ராணுவ வீரருக்கு மேளதாளத்துடன் திருவிழா போல் உற்சாக வரவேற்பு அளித்த ஊர் பொதுமக்கள்* - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 2 June 2024

ஜோலார்பேட்டை அருகே 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெற்று வீடு திரும்பிய ராணுவ வீரருக்கு மேளதாளத்துடன் திருவிழா போல் உற்சாக வரவேற்பு அளித்த ஊர் பொதுமக்கள்*


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மேல் அச்சமங்கலம் பொன்னியம்மன் கோவில் வட்டம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் காந்தி வயது 49 இவர் 1996 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். இந்த நிலையில் ராணுவத்தில் 195 பீல்ட் ரெஜிமென்ட் ஆர்ட்லரி குழுவில் சுபேதரர் பதவியில் ரேடியோ ஆபரேட்டராக ஜம்மு காஷ்மீரில் 12 ஆண்டுகளும் அதேபோல் சியாச்சன் பகுதியில் ஒன்பது வருடங்களும் மேலும் சிட்டி ஏரியாவில் 7 ஆண்டுகள் என 28 ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார்.


இந்த நிலையில் 28 ஆண்டுகள் பணிபுரிந்து விட்டு தற்போது ஓய்வு பெற்றதன் காரணமாக சொந்த ஊரு திரும்பியபோது அப்பகுதி மக்கள் காந்தியை மாலை அணிவித்து மேல தாளங்களுடன் திருவிழாபோல் ஊர்வலமாக அழைத்து வந்தனர். இந்தச் சம்பவம் அனைவரும் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை .

No comments:

Post a Comment

Post Top Ad

*/