திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பத்தூர் நகராட்சி அண்ணா நகர் பகுதியில் உள்ள மஞ்சா குடோனில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
நேற்று வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் முறையே 267, 267, 261 மற்றும் 247 என மொத்தமாக 1042 தேர்தலுக்காக பயன் படுத்தப்பட்ட VVPAD அனைத்தும் சரி பார்க்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. மேலும் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட EVM இயந்திரங்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் தேர்தல் பச்சைமுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை.
No comments:
Post a Comment