திருப்பத்தூர் அருகே ₹7.12 கோடி மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணியினை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்* - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 August 2024

திருப்பத்தூர் அருகே ₹7.12 கோடி மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணியினை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்*

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியிலிருந்து செல்லரப்பட்டி வரை தினந்தோறும் எலவம்பட்டி, குனிச்சி, ஆதியூர் பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என 15 லட்சம் மக்கள் சென்றுவரும் நிலையில் போதுமான சாலைவசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர்.


இதனை தொடர்ந்து சாலை அமைத்து தரக்கோரி அப்பகுதிமக்கள் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி இடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று ஆதியூர் பகுதியிலிருந்து செல்லரப்பட்டி வரை 2023- 24 ஆம் ஆண்டிற்கான  பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கிழ் ரூபாய் 7.12 கோடி மதிப்பில் சுமார் 6.100 கிலோமீட்டர் தொலைவில் புதிய தார் சாலை அமைக்கும் பணியினை திருவண்ணாமலை நாடாளு மன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். 


இந்த நிகழ்வின் போது திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் துறை சார்ந்த அரசுஅதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் உடன் இருந்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/