அதிவேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமா மாவட்டட நிர்வாகம் ! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 19 August 2024

அதிவேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமா மாவட்டட நிர்வாகம் !


திருப்பத்தூர் மாவட்டம் கந்தலி ஒன்றியத்திற்குட்பட்ட காக்கங்கரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை செல்லும் சாலையில் போதிய மின்விளக்கு வசதி இல்லாத காரணத்தினாலும் போதிய வேகத்தை கட்டுப்படுத்தக்கூடிய பெயர் பலகைகள் மற்றும் தடுப்பு வேலிகள் அமைக்காத காரணத்தினால் இங்கு அடிக்கடி பல விபத்துக்கள் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது, குறைந்தது ஒரு இரண்டு மூன்று மாதங்களில் இதுவரை கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் இங்கு நடைபெற்று உள்ளது.

இன்று ஆரம்ப சுகாதார ஆரம்ப சுகாதாரம் அருகே சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெரியவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அவர் கணுக்கால் உடைந்து அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு 108  ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இந்த சாலை ஊரின் பிரதான சாலையாக மற்றும் திருப்பத்தூர் - தர்மபுரி செல்லும் சாலையாகவும் உள்ளது, அதுமட்டுமில்லாமல் இந்த சாலையை கடந்து தான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் செல்ல வேண்டும்.


ஆகவே மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் கந்திலி ஆய்வாளர் அவர்கள் இங்கு உள்ள சாலை ஓரங்களில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் மற்றும் போதிய எச்சரிக்கை பலகைகளை வைக்குமாறும் வேகத்தை கட்டுப்படுத்த அதற்கான நடைமுறைகளை செய்து தருமாறும் ஊர் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


- மாவட்ட செய்தியாளர்  மோ. அண்ணாமலை 

No comments:

Post a Comment

Post Top Ad

*/