புதுப்பேட்டை ரோடு ரயில்வே தரை பாலத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 September 2024

புதுப்பேட்டை ரோடு ரயில்வே தரை பாலத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள புதுப்பேட்டை ரோடு தரைபாளத்தை மாவட்ட ஆட்சியர் தர்ப்பக ராஜ் ஆய்வு மேற்கொண்டார். இந்த புதுப்பேட்டை ரோடு ரயில்வே தரை பாலம் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.


இந்த தரை பாலலம் பிரதான சாலையாக திகழ்ந்து வருகிறது, இந்த பாலத்தின் வழியாக முண்ணுறுக்கும் மேற்ப்பட்ட கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக திகழ்ந்து வருகின்றது, பல்வேறு கிராமங்களில் விவசாய நிலங்களில் விளையும் காய்கள்.கீரைகள்.பழங்கள்,பூக்கள் உள்ளிட்ட பல்வேறு விலை பொருட்கள் அன்றாட விவசாயிகள் திருப்பத்தூர் உழவர் சந்தை மற்றும் காய் மார்கெட்டில் விற்பனை செய்கின்றனர். 


இந்நிலையில் மழை காலங்களில் தரை பாலத்தில் மழை தண்ணீர் தேங்கி ஏரி போல் காட்சியளிக்கின்றது வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி பத்து கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, இதைக் குறித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர் கோரிக்கையின் அடிப்படையில் இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் ரயில்வே துறையினர் தரை பாலத்தை ஆய்வு மேற்கொண்டனர்.


ரயில்வே தரை பாலத்தின் அருகே மழை நீர் செல்லும் பாதையை அப்பகுதி குடியிருப்பு வாசிகள் ஆக்கிரமிப்பு செய்து மழை நீர் செல்ல போதிய வழியில்லாமல்  ரயில்வே தரை பாலத்தின் வழியாக மழைநீர் செல்கின்றது என்பது ஆய்வில் தெரியவந்தது, ஆய்வின் போது மழை தண்ணீர் செல்லும் கால்வாய்களை தூர்வாரி அகலப்படுத்தி சரி செய்யும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க ஆய்வின் போது தெரிவித்தார் உடன் உடன் ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் துறை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடதக்கது.

- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/