திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியைச் சார்ந்த அண்ணாதுரை மகன் நரசிம்மன் (32) இவருக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் இவர் பென்னாச்சி அம்மன் கோவில் வட்டம் பகுதியில் சொந்தமாக ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வீடு கட்டி வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை வீட்டிற்கு தண்ணீர் விட சென்ற நரசிம்மன் மோட்டாரை போட்டுவிட்டு தண்ணீர் தொட்டியில் இறங்கியுள்ளார் இதனால் மின்சாரம் தாக்கி தண்ணீர் தொட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து கட்டிட வேலைக்கு வந்த மேஸ்திரி தண்ணீர் தொட்டியை பார்த்தபோது நரசிம்மன் உயிரிழந்ததைக் கண்டு உறவினருக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நரசிம்மனின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதிதாக கட்டப்பட்டு வந்த வீட்டில் மின்சாரம் தாக்கி தண்ணீர் தொட்டியில் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
- மாவட்ட செய்தியாளர் அண்ணாமலை .மோ.
No comments:
Post a Comment