திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைத் தீர்வு நாள் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
பொதுமக்களிடையே பல்வேறு கோரிக்கைகளை குறித்து மனு பெற்றனர், பின்னர் மாற்று திறனாளிகளுக்கு மூன்று தையல் இயந்திரம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார், அதன் தொடர்ச்சியாக சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும்- யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன்! சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்! சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்! மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்!
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மாவட்ட வருவாய் துறை அலுவலர் நாராயணன் மற்றும் பல்வேறு அரசு துறை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
- மாவட்ட செய்தியாளர் மோ அண்ணாமலை
No comments:
Post a Comment