ஜாமின் பெறுவதற்காக பேரறிவாளன் புழல் சிறைக்கு மீண்டும்அழைத்துச் செல்லப்பட்டார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 15 March 2022

ஜாமின் பெறுவதற்காக பேரறிவாளன் புழல் சிறைக்கு மீண்டும்அழைத்துச் செல்லப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் தன்னுடைய சொந்த வீட்டில் கடந்த ஒன்பது மாதங்களாக பரோலில் இருந்த பேரறிவாளன் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி ஜாமீன் வழங்கப்பட்டு 11ம் தேதி புழல் சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன்  அழைத்துச் செல்லப்பட்டார்.

அப்போது நெகிழ்ச்சியுடன் கண்ணீர் மல்க சுமார் 31 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்த தன்னுடைய மகனை கண்ணு இந்த வாகனத்தில் செல்வது இதுதான் கடைசி என்கிற தோரணையில் மீண்டும் பத்திரமாக வா என்று வாழ்த்தி அனுப்பிய அற்புதம்மாளுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும் வகையில்   உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய படிவத்தை ஆன்லைனில் பேரறிவாளனுடைய வழக்கறிஞர் எடுத்துக்கொண்டு புழல் சிறையை நெருங்கும் பொழுது இன்னும் சிறை அலுவலகத்திற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவில்லை எனவும் பேரறிவாளனுக்கு வருகின்ற 22 ஆம் தேதி வரை பரோல் விடுப்பு காலம் இருக்கும் பொழுது ஏன் அவசர கதியாக வந்தீர்கள் என்று கேட்டதால் மீண்டும் ஜோலார்பேட்டையில் உள்ள அவருடைய வீட்டுக்கு திரும்பினர்.


இந்நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஜாமின் பெறுவதற்காக இன்று காலை 6.30மணி அளவில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் வாணியம்பாடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்லப்பாண்டியன் உள்ளிட்ட சுமார் 15க்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்களை கொண்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். 

No comments:

Post a Comment

Post Top Ad