திங்கட்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 15 March 2022

திங்கட்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள். 

இக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முதன்மை திட்டமான உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வரபெற்ற மனுக்களுகக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேணடும் என அனைத்து துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். மேலும் வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, வனத்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறுவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 255 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 

மேலும் நிலுவையில் உள்ள மனுக்களை இம்மாத இறுதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் அனைத்து துறை அலுவலர்களுக்கும் ஆணையிட்டார்கள். பின்னர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் இரண்டு கால்களும் பாதிப்படைந்த 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.50 இலட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட 6 ஸ்கூட்டர் வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள். 

முன்னதாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் ஜோலார்பேட்டையை சேர்ந்த மாற்றுத்திறனாளி செல்வி.வனிதா அவர்கள் 3 சக்கர சைக்கிள் வேண்டி கோரிக்கை மனுவை அளித்தார். அதனடிப்படையில் உடனடியாக தீர்வுக்காணப்பட்டு மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள். 

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.வில்சன்இராசசேகர், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திரு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.விஜயன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திருமதி.பானுமதி, உதவி ஆணையாளர் (கலால்) திருமதி.பானு மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad