கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 25 March 2022

கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி.

ஏற்படும் தீமைகள் குறித்து இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணிக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்


திருப்பத்தூர் மாவட்டம் தூய நெஞ்சக்  கல்லூரியிலிருந்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி வரை நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் இரு சக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் இருசக்கர வாகன பேரணி சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவு வரை நடைபெற்றது


மேலும் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மற்றும் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் மற்றும் திமுக தமிழ்நாடு வேளாண் பொருள் உற்பத்தியாளர் சங்க தலைவர் S.R. ராஜேந்திரன் MABL திருப்பத்தூர் திமுக நகர் மற்றும் செயலாளர் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் விடுதிகள் ஏடிஎம் வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து துண்டு பிரச்சாரங்களையும் கொடுத்தனர்.


மேலும் நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் மற்றும் அரசு துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மற்றும் திமுக நகராட்சித் தலைவர் சங்கீதா மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad