அனைவருக்கும் சமமான வேலை நேரம் வேண்டி விவசாய தொழிலார்கள் முற்றுகை ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 25 March 2022

அனைவருக்கும் சமமான வேலை நேரம் வேண்டி விவசாய தொழிலார்கள் முற்றுகை ஆர்ப்பாட்டம்.

அரசு அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் காலை 10 மணிக்கு பணியை தொடங்குவதும், மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் திட்ட தொழிலாளர்கள் மட்டும் காலை 7 மணிக்கு பணிக்கு வர வேண்டும் என்பது முறைதானா?  பணி நேரத்தையும் ஒரேமாதிரியாக  மாற்ற வேண்டும் என விவசாய சங்கத்தினர் மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம்.

இதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் அனைத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டு  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த போராட்டத்திற்குவிவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் துணை செயலாளர் தேவராஜ் தலைமை தாங்கினார், அவர் பேசுகையில், ஆண்டுக்கு 200 நாள் வேலை கொடு தினக்கூலியாக 600 ரூபாய் வழங்க  வேண்டும், வேலைத்தளத்தில் 7.00 மணிக்கு வருகை பதிவேடு பதிவு என்பதை மாற்றி பழையபடி காலை 9.00 மணிக்கு பதிவு செய்ய வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் உள்ளவர்களை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்திற்கான நிதி 25 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யவேண்டும், மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூபாய் 6000 வழங்கிட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.


இந்த போராட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டகாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad