திருப்பத்தூரில் நடைபெற்று வந்த இலக்கிய திருவிழா நிறைவு! 30 லட்சத்திற்குமேல் புத்தகங்கள் விற்பனை! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 April 2022

திருப்பத்தூரில் நடைபெற்று வந்த இலக்கிய திருவிழா நிறைவு! 30 லட்சத்திற்குமேல் புத்தகங்கள் விற்பனை!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தூயநெஞ்சக்கல்லூரியில் திருப்பத்தூர் இலக்கிய பண்பாட்டு கலை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து  தமிழ் இலக்கிய திருவிழா மற்றும் புத்தக கண்காட்சி கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நடைப்பெற்ற விழா இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தலைமையில் நிறைவு பெற்றது.


இத்திருவிழாவில் பல்வேறு தலைப்புகளில் 42 அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், என பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர், மேலும் 50க்கும் மேற்பட்ட புத்தக மையங்கள் அமைக்கப்பட்டு 1 லட்சத்திற்கு மேலாக புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிந்தது, இந்நிலையில் இவ்விழாவில் பங்கேற்ற அரசு அதிகாரிகள், பள்ளி கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு 30 லட்ச ரூபாய் மேலாக  புத்தகங்களை வாங்கி சென்றதால் புத்தக வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த இலக்கியம் மற்றும் புத்தக திருவிழா நிறைவு விழாவில் பரதநாட்டியம், மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது, மேலும் திருப்பத்தூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் நல்லதம்பி, தேவராஜ், வில்வநாதன், மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad