திருப்பத்தூரில் நாடாளும் மக்கள் கட்சி பொதுக்கூட்டம் நிவாரண பொருட்கள் வழங்கும் விழா. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 April 2022

திருப்பத்தூரில் நாடாளும் மக்கள் கட்சி பொதுக்கூட்டம் நிவாரண பொருட்கள் வழங்கும் விழா.

நாடாளும் மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம் வரும் 16ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு திருப்பத்தூர் - தருமபுரிமெயின்ரோடு,காமராஜர்நகரில் உள்ள சின்னகன்னி கைலாசம் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

மாநில அமைப்பாளர் ராஜீவ்காந்தி முன்னிலையில் நடைபெறும் இக்கூட்டத்தில் திருப்பத்தூர் தெற்கு மாவட்ட தலைவர் சி.கே.சுகவாணன் வரவேற்புரை நிகழ்த்துகிறார். நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனர்-தலைவர் ஜெ.அக்னிசெல்வராசு தலைமையேற்று நடத்தும் நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மேற்கு மாவட்ட தலைவர் கா.விஸ்வநாதன், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டச்செயலாளர் பா.பெரியசாமி, திருவண்ணாமலை மாவட்ட தலைவர் சே.ராஜசேகர், விஜய்டிவி புகழ் திரைப்பட எழுத்தாளருமான ஏ.ஜே.பிரபு ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

விழுப்புரம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் ஆ.அருள், தருமபுரி மாவட்டத்தலைவர் ப.கனகராஜ், கந்திலி ஒன்றய பொருளாளர் என்.மாது ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர், ஏ.கே. மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவரும், சமூக ஆர்வலருமான பு.வேலு, நம் மக்களின் குரல் சமூக ஊடக சமூக ஆர்வலருமான வே.ராதாகிருஷ்ணன், சமூக ஆர்வலர் எஸ்.சீனிவாசன் உள்ளிட்டோர் நிவாரண பொருளை வழங்க உள்ளனர். செல்லயேபட்டி கே.ரமேஷ், சி.பி.கிருஷ்ணன்,  எம்.பெருமாள், கே.தங்கபெருமாள், ஜி.மோகன், ஜி.குமார், எஸ்.சிலம்பரசன் ஆகியோர் பங்கேற்கும் நிகழ்ச்சி நிறைவில் திருப்பத்தூர் தெற்கு மாவட்ட செயலாளர் கி.தமிழ்மொழி நன்றியுரை நிகழ்த்துகிறார்.


 

No comments:

Post a Comment

Post Top Ad