ஆம்பூர் அருகே மர்ம வெடி பொருளை கடித்த பசுமாடு தாடை கிழிந்து படுகாயம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 April 2022

ஆம்பூர் அருகே மர்ம வெடி பொருளை கடித்த பசுமாடு தாடை கிழிந்து படுகாயம்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியை சேர்ந்த சின்னகண்ணன்  என்பவர் விவசாய பணிகளுக்காக கால்நடைகளை வளர்த்து வரும் நிலையில்  இன்று மாலை வழக்கம் போல் பசு மாடுகளை மேய்ச்சலுக்காக  அருகாமையில் உள்ள ஏரிக்கரையில் அவிழ்த்து விட்டு உள்ளார், அப்போது  ஏரிக்கரையில் புதர் மறைவில் இருந்து பலத்த வெடி சத்தம் கேட்டு உள்ளது.

உடனடியாக அப்பகுதிக்கு சின்னகண்ணன் சென்று பார்த்த போது அங்கு சமூக விரோதிகள் சிலர் வீசிச் சென்ற மர்ம பொருளை கடித்த பசுமாடு தாடை மற்றும் வாய் பகுதியில் பலத்த காயமடைந்து வலியால் அலறி துடித்து உள்ளது அதனை பார்த்த சின்னகண்ணன் உடனடியாக பசுமாட்டை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து உமராபாத் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் புதர் மறைவில் வெடி பொருளை மறைத்து வைத்த மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ஆம்பூர் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல காட்டு பன்றியை விரட்டுவதற்காக சிலர் வைத்த வெடிகுண்டுகளைக் கடித்த மாடுகள் காயமடைந்த சம்பவவங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad