ஜோலார்பேட்டை அருகே மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை!. 5000 அபராதம் விதித்து நீதிபதி தோத்தரமேரி உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த குடியனாங்குப்பம் பகுதியை சேர்ந்த விமலா (31) என்பவரை ஆரணி இரும்பேடு பகுதியை சேர்ந்த சங்கர் (40) என்பவர் திருமணம் செய்துள்ளார். விமலா ஏற்கனவே திருமணம் ஆனா நிலையில் குழைந்தை இல்லாத காரணத்தினால் கணவனை பிரிந்து தனது தாயாருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

பின்னர் இந்த வழக்கு விசாரணை திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றதில் நடைபெற்று வந்த நிலையில் இன்று நீதிபதி தோத்திரமேரி மனைவியை கொலை செய்த சங்கருக்கு ஆயுள் தண்டனை விதித்து 5000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment