அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்த கால்நடைகள் விவசாயிகள் கவலை. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 9 April 2022

அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்த கால்நடைகள் விவசாயிகள் கவலை.

 திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே வெங்காய பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பனைமரத்து வட்டம் பகுதியில் வசிப்பவர் முனிசாமி மகன் கணேசன் (45) கால்நடை வளர்ப்பு தொழில் செய்து அதன் மூலம் தன்னுடைய மூன்று பிள்ளைகளை படிக்க வைப்பது மட்டும் அல்லாமல் குடும்பத்தின் வாழ்வாதாரமே அதன் மூலம் வரும் வருமானத்தில் தான் இருந்து வந்துள்ளது.


இந்நிலையில் திடீரென காலை தன்னுடைய கொட்டகையில் கட்டிவிட்டு சென்று  மீண்டும் மதிய வேளையில் திரும்பி வந்து பார்க்கும் பொழுது கட்டி விட்டு சென்ற இடத்திலேயே மர்மமான முறையில் 2 கறவை பசு மாடுகளும் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துகிராம நிர்வாக அலுவலருக்கு கணேசன் தகவல் தெரிவித்துள்ளார். 


பின்பு சம்பவ இடத்திற்கு வந்த  திருப்பத்தூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் நாசர் முன்னிலையில் கால்நடை மருத்துவர் சத்யா இறந்த மாடுகளை பிரேத பரிசோதனை செய்து உடல் உறுப்புகளை சேகரித்து சென்னை மாதவரத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.


இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்  அடுத்தடுத்து சுமார் 10க்கும் மேற்பட்ட வெவ்வேறு நபர்களுடைய  கறவை மாடுகள் மற்றும் காளைகள் இதேபோல் மர்மமான முறையில் இறந்து உள்ளதால் அப்பகுதியில் உள்ள கால்நடை விவசாயிகள் பெரும் அச்சத்தில் உள்ளதாக கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad