ஆம்பூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் உயிரிழப்பு 3 பேர் காயம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 8 April 2022

ஆம்பூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் உயிரிழப்பு 3 பேர் காயம்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜெயபாரத் நகர் பகுதியைச் சேர்ந்த பால விக்னேஸ்வரன் தனது உறவினர்களான  சங்கீதா ,சுப்பிரமணி, சபாபதி ஆகியோருடன் சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் உள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே உள்ள தடுப்புகள் மீது மோதி பக்கவாட்டுப் பகுதியில் உள்ள புறவழிச் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பெங்களூரு பகுதியைச் சேர்ந்த சங்கீதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் மேலும் உடன் பயணம் செய்த மூன்று பேர் படுகாயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad