தூய நெஞ்சக் கல்லூரியில் முத்தமிழ் விழா!!! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 April 2022

தூய நெஞ்சக் கல்லூரியில் முத்தமிழ் விழா!!!

திருப்பத்தூர் மாவட்டம், தூய நெஞ்சக் கல்லூரியின் வீரமாமுனிவர் தமிழ் மன்றம் & தமிழ் முதுகலை & ஆய்வுத்துறை, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி இணைந்து, இரண்டு நாள் முத்தமிழ் விழா இனிதே தொடங்கியது. இந்த விழாவில் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர்,பொன் செல்வகுமார் அவர்கள் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர், அருட்தந்தை முனைவர் D. மரிய அந்தோணிராஜ் தலைமை உரையாற்றினார். 


கல்லூரியின் துணை முதல்வர்,திரு. சேவியர் ராஜரத்தினம் (கல்விப்பிரிவு) வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்வில், தமிழ்த் துறைப்  உதவி பேராசிரியர் முனைவர், கி.பார்த்திராஜா அறிமுக உரையாற்றினார்.  தமிழர்களின் வரலாற்றை உலகத்திற்கே வெளிச்சம் காட்டிய இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர்(கீழடி) திருமிகு.அமர்நாத் ராமகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற பேராசிரியர்,திரு. ரத்தினம்நடராசன் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் கல்லூரியின் பேராசிரியர்கள், முனைவர் அ. பிரபு, முனைவர் சிவசந்திரகுமார் மாணவர்கள் என்று மிகச் சிறப்பாக நிகழ்வு தொடங்கியது. முடிவில் உதவிப் பேராசிரியர்,திரு. மோகன்காந்தி அவர்கள் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad