பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு பழைய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் வாயில் துணியை கட்டி போராட்டம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 May 2022

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு பழைய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் வாயில் துணியை கட்டி போராட்டம்.

திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரறிவாளன். விடுதலையை கண்டித்து வாயில் துணியை கட்டிக்கொண்டு நூதன போராட்டம், முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது இதை கண்டித்து இன்று திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி பழைய பேருந்து நிலையம் எதிரில், ராஜீவ்காந்தி திருவுருவச் சிலை  முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் முருகன், தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாயில் துணியை கட்டி பேரறிவாளன். விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்  ‌இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் ,பலர் கலந்து கொண்டார் என குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Top Ad