ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 20 May 2022

ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சியில் திருப்பத்தூர் ரோட்டரி சங்கம் மற்றும் மட்றப்பள்ளி நல்லசமாரியன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.


இந்த முகாம் திருப்பத்தூர் நோட்டரி சங்க தலைவர் பாரதி மற்றும் நகரமன்ற உறுப்பினர் வினோதினி தலைமையில் நடைபெற்றது, மேலும் இந்த முகாமில் நகராட்சி அலுவலக பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் கலந்து கொண்டு இலவசமாக கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

இதில் கண் பரிசோதனை, கண் நீர் அழுத்த பரிசோதனை, கண்புரை பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை, நுண் துழையிட்ட அறுவை சிகிச்சை, இம்முகாமில்  முக்கிய அம்சங்களாக அமைந்தது.


இந்த முகாமில் சுமார் 50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பங்கு கொண்டு பயன் பெற்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad