மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து நினைவஞ்சலி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 May 2022

மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து நினைவஞ்சலி.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகே திருப்பத்தூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் திரு உருவப்படத்திற்கு அவரது 31ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பார்த்திபன் தலைமையில் வெங்கடேசன் சிவாஜி ஜெகநாதன் ரஜினி மணி ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து அனைவரும் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


இதனை தொடர்ந்து ஒழிப்போம் ஒழிப்போம் தீவிரவாதத்தை ஒழிப்போம் மதிப்போம் மதிப்போம் சட்டத்தை மதிப்போம் என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை கூறி கோஷங்கள் எழுப்பினர், நிகழ்ச்சியின்போது நகர தலைவர் சத்தியமூர்த்தி வரவேற்புரை வழங்க இறுதியாக நகர இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் உமர்பாரூக் நன்றி செலுத்தினார்.

No comments:

Post a Comment

Post Top Ad