திருப்பத்தூர் எஸ்பி மற்றும் வேலூர் சரக டிஐஜி இணைந்து போதை வஸ்துகளுக்கு எதிரான விழிப்புணர்வு குறும்படத்தை இணையதளத்தில் வெளியிட்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா இணைந்து போதைவஸ்துக்கு எதிரான விழிப்புணர்வு குறும்படத்தை இணைய தளத்தில் வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து பொது மக்களின் பார்வைக்காக வரவேற்பறையில் குறும்படம் காட்சியிடப்பட்டது.
இந்த குறும்படத்தின் மூலம் கஞ்சா குட்கா மற்றும் மது போதைகளுக்கு அடிமையாகும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு சிறு முயற்சி எடுத்து இருக்கிறோம். இதனால் தவறான பாதைக்கு செல்லும் இளைஞர்கள் மனம் மாறக்கூடிய வாய்ப்பு உருவாகும் என்று காவல்துறை வட்டாரத்தில் கூறப்பட்டது.
No comments:
Post a Comment