திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என எம்எல்ஏ வேண்டுகோள். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 June 2022

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என எம்எல்ஏ வேண்டுகோள்.

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மாவட்டம் முழுவதும் உற்சாக வரவேற்பு தரவேண்டும் என நிர்வாகிகளுக்கும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு ம் வேண்டுகோள் அறிக்கை விடுத்துள்ளார்.வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தை மூன்றாக பிரித்து திருப்பத்தூர் மாவட்ட நிர்வாக வசதிக்காக தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. 


இதனை அடுத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்காக 109.72 கோடி மதிப்பீட்டில் கட்டிட பணி முடிந்தது தற்போது திறப்பு விழா நிகழ்ச்சிக்காக தயாராக உள்ளது இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க. தேவராஜ் ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகளுக்கும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் அறிக்கை விடுத்துள்ளார். அதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரும் 29ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்து பல்வேறு  சிறப்பிக்க உள்ளார். 


இதனால் தமிழக முதல்வருக்கு அந்தந்த தொகுதி சார்பில் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கழக முன்னோடிகள் அனைவரும் உற்சாக வரவேற்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அறிவித்துள்ளார். 


இதனால்  மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர் என தெரிவித்துள்ளார்... 

No comments:

Post a Comment

Post Top Ad