மடவாளம் ஊராட்சி இணைந்த அண்ணாநகர் பகுதியில் மரக்கன்று நடும் நிகழ்வுகள். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 26 June 2022

மடவாளம் ஊராட்சி இணைந்த அண்ணாநகர் பகுதியில் மரக்கன்று நடும் நிகழ்வுகள்.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவில் இருந்து மடவாளம் ஊராட்சி சேர்ந்த அண்ணாநகர் பகுதியில் பசுமையை காப்போம் என்ற நோக்கத்தில் பசுமை தாய்நாடு அறக்கட்டளை சார்பில் இன்று 100 மரக்கன்றுகள் நடப்பட்டது, இது போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து செய்து வரும் நமது பசுமை தாய்நாடு அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் ஓர் இணைந்த கைகளால் நிகழ்வுகளை தொடர்ந்து செய்து வருகிறார் இந்த நிகழ்வில் பலவகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.இலுப்பை, பாதாம், வேம்பு  அத்திமரம், புங்கன்கன்று, பூந்திக்கொட்டை மரம், பூவரசன், நாவல் மரக்கன்று  வகைகள் என்ன நடப்பட்டனர், இதில் சிறப்பு விருந்தினர்களாக திருமதி.கோமதி கார்த்திகேயன் தலைவர், திருமதி. கஸ்தூரிரகு, கவுன்சிலர்  திரு .வேலு  உறுப்பினர்  மற்றும்  மைய்லாபிரகாஷ்  உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர்  திரு  அண்ணாமலை இவர்கள் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளர்கள் : ARUNA XEROX  உரிமையாளர் திருப்பத்தூர். திரு சக்தி. Army திருமால் நகர், திரு.  அன்புச்செல்வம் கால்நடை மருத்துவர் இயற்கை மீட்பு அறக்கட்டளை காக்கனாம்பளையாம், திரு வே.ராதாகிருஷ்னனன் சமூக ஊடக மையம், பசுமை தாய்நாடு அறக்கட்டளை  நிர்வாகிகள்  மற்றும் உறுப்பினர்கள் குமரேசன், பெரியண்ணன், மனிவாசன், ஜெய்சங்கர், அன்பழகன், யுவராஜ், கனிஷ், விக்னேஷ், கோபால், ராஜேஷ் மற்றும் ஊர்பொதுமக்கள் சாலையோர மரம் சமதூரம் நட்டு பாதையில் பயணிக்கும்வோர்கெல்லாம் பச்சை மர நிழலின் பசுமை உணர செய்ய பார்த்து பார்த்து மரம் நடுவோம்.

நிகழ்வினை முன்நின்று பசுமை தாய்நாடு அறக்கட்டளை நிறுவனத் தலைவர் மற்றும் மாவட்ட பசுமைக் குழு  உறுப்பினர்  திரு. மு. பெ. சத்யராஜ், இது போன்ற நிகழ்வுகளை சிறப்பாக வழிநடத்தி கொண்டு வருகிறார் என குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad