பொம்மிகுப்பம் அரசு மேல் நிலைப்பள்ளியில் போதை - பொருள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 1 July 2022

பொம்மிகுப்பம் அரசு மேல் நிலைப்பள்ளியில் போதை - பொருள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது!

வேலூர் மாவட்ட பெண்கள் தாய் விழுதுகள் அறக்கட்டளையின் சார்பாக இன்று பொம்மிகுப்பம் கிராமம், அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ - மாணவிகளிடையே போதை பொருள் விழிப்புணர்வு சார்ந்த கூட்டம் நடைபெற்றது.


இந்த கூட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. முருகன் அவர்கள், வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். பொம்மிகுப்பம் ஊராட்சிமன்ற உறுப்பினர்கள், கீதா பூபாலன், சுகந்தி சுரேஷ், பூவரம்பு சர்வேசன், ஜெயராணி, ஆனந்தி கோவிந்தன் முன்னிலை வகித்தனர்.


சிறப்பு விருந்தினர்களாக ஊராட்சிமன்ற தலைவி, தேன்மொழி வெங்கடேசன், நம் மக்களின் குரல் ராதாகிருட்டிணன் ஊராட்சிமன்ற செயலாளர் ஆனந்த்ராஜ், கதிரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவி சரஸ்வதி ஜெயக்குமார், துணைத் தலைவர் காஞ்சனா மதிவாணன், Ak மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் பு. வேலு,  திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசகர் செல்வி மதியரசி உட்பட கலந்து கொண்டனர்.


மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் பு.வேலு பேசும் பொழுது, இன்றைய இளைஞர்கள் போதைக்கு அடிமையாக இருக்கின்றனர். இந்த போதைப் பழக்கத்திலிருந்து மிக விரைவாக மீட்டு விட முடியும். இன்றைய பள்ளி மாணவ - மாணவச் செல்வங்கள், அவர்களுக்கு போதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மிக சிறப்பாக கருத்துரை வழங்கினார்.


பொம்மிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி வெங்கடேசன் அவர்கள் பேசும்பொழுது, போதை பழக்கத்திலிருந்து எவ்வாறு மீள்வது? மாணவர்களுக்கு தன்னம்பிக்கை கருத்துக்களை வழங்கினார்.


இதில் வேலூர் மாவட்ட பெண்கள் தாய் விழுதுகள் அறக்கட்டளையின் மேனேஜர் சந்துரு அவர்கள் மிக சிறப்பாக ஒருங்கிணைத்தார். வேலூர் மாவட்ட பெண்கள் தாய் விழுதுகள் அறக்கட்டளை ஊழியர் சமந்தா ஊராட்சி மன்ற பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிறைவாக பள்ளி மாணவ மாணவிகள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad