ஆம்பூர் அருகே 100 நாள் வேலையில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை கொலவிகள் கொட்டியதில் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் படுகாயம். அரசு மருத்துவமனையில் சிகிச்சை.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சாத்தம்பாக்கம் ஊராட்சியில் 100நாள் வேலை திட்டத்தில் பணியாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதரில் கொலவிகள் கூடு கட்டி இருந்தது. அப்போது 100 நாள் திட்டத்தில் வேலை செய்யும் பணியாளர்களை புதர் அருகில் வேளையில் ஈடுபட்டு இருந்த போது கொலவிகள் கொட்டியது. இதனை தொடர்ந்து பணியாளர்கள் இங்கும் அங்கும் ஓடினர்.
இருப்பினும் கொலவிகள் கொட்டியதில் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment