திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த முல்லை கிராமத்தில் பூட்டி இருந்த வீடுகளை குறிவைத்து மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளன ர். கொள்ளை சம்பவம் நடந்த வீடுகளின் உரிமையாளர் மருத்துவமனை, உறவினர்களின் வீடு, கோவில் திருவிழா என பல்வேறு காரணங்களுக்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று இருந்தனர்.
மேலும் நேற்று இரவு முன்தினம் இரவு விட்டுவிட்டு பெய்த மழையை சாதகமாக பயன்படுத்திய மர்ம நபர்கள் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார்(அதிமுக) சகோதரரான ரவீந்தர் குமார் என்பவர் வீடு உட்பட 11 வீடுகிளின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோக்களில் இருந்த 10 சவரன் தங்க நகைகள், 2 லட்சம் ரொக்க பணம், வெள்ளி பொருட்கள் அடித்துள்ளனர். மேலும் கிராமத்தின் மையப் பகுதியில் உள்ள முருகன் கோவில் உண்டியல் உடைத்து அதில் இருந்த பணமும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர்கள் ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முல்லை கிராமத்தில் ஒரே இரவில் அடுத்தடுத்து 11 வீடுகளின் பூட்டை உடைத்து நகை பணம், வெள்ளி பொருட்கள் மற்றும் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment