ஆம்பூரில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு. நகர போலீசார் விசாரணை. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 October 2022

ஆம்பூரில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு. நகர போலீசார் விசாரணை.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பொன்னபல்லி பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன் (46). இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் ஆம்பூர் மு.க கொல்லை பகுதியில் அப்துல் ஹக்கிம் என்பவருக்கு சொந்தமான வீடு கட்டும் பணியில்  சக தொழிலாளர்களுடன் ஈடுபட்டு இருந்தார். அப்போது மேல் தளத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது கட்டிடத்தின் மேலே செல்லும் மின் கம்பி உரசியதில் நீலகண்டன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு சென்ற நகர போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

*/