திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் படகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் மற்றும் சண்முகம். இருவரும் உறவினர்கள். அதே பகுதியில் சங்கருக்கு ஒன்றே ஏக்கர் நிலமும், சண்முகத்திற்கு ஒரு ஒன்ற ஏக்கர் நிலம் உள்ளது. சங்கர் சண்முகம் இடைய கடந்த 20 ஆண்டுகளாக நிலத்துக்கு போகும் வழி பாதை பிரச்சனை இருந்து வருகிறது. இதற்காக சங்கர் ஆலங்காயம் காவல் நிலையத்தில் பல முறை புகார் அளித்துள்ளார். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று சங்கர் நிலத்தில் நெல் அறுவடை செய்து சண்முகம் நிலத்தின் வழியாக எடுத்து சென்றதாக கூறி சண்முகம் சங்கரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சண்முகம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கத்தி மற்றும் ஆய்தங்களால் சங்கர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மீது தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் சங்கர் தரப்பில் முருகேசன், அபிராமி, சிரஞ்சீவி, ஜெயந்தி ஆகிய ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். இதே போன்று சங்கர் தரப்பில் நடத்திய தாக்குதலில் சண்முகம் மற்றும் ஜெயமோகன் ஆகியோர் காயம் அடைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆலங்காயம் போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஜெயந்தி மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment