நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தலைமை வகித்து விழாவை தொடக்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் வரும் டிசம்பர் 5ஆம் தேதி அன்று மாநில அளவில் சென்னையில் மாநாடு நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களில் பொதுசுகாதார துறையினருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நம் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற பணியாளர்கள் மாநில அளவில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டியில் கலந்துக் கொள்ள உள்ளார்கள். கொரோனா காலகட்டத்தில் பொது சுகாதாரத்துறையில் சிறப்பாக செயல்பட்டது தமிழ்நாடு மாநிலம் மட்டும் தான். நமது மாநிலத்தில் கொரோனா காலகட்டத்தில் சிறப்பான திட்டமிடல் செயல்பட்டு வந்தது. சுகாதாரத் துறையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மருத்துவரின் ஆலோசனைப்படி நாம் மாத்திரைகளை உட்கொண்டாலும், சுகாதாரத்துறை மட்டுமல்ல அனைத்து துறை பணியாளர்களும் தினமும் யோகா பயிற்சி அல்லது உடற்பயிற்சி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும். அதன் மூலம் நமது இதயம், மூளை, உடல் சீராக செயல்படும் மற்றும் ஏதோ ஒரு விளையாட்டு போட்டிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த இரண்டையும் கடைப்பிடித்தால் தங்களது உடல்நிலை ஆரோக்கியமாகவும் சீராகவும் இருக்கும் என்றார்.
தொடர்ந்து பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 166 சுகாதார துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களையும் ஆட்சியர் வழங்கினார்.
வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர் சூரியகுமார், மாவட்ட பால்வளத் தலைவர் எஸ்.இராஜேந்திரன், ஒன்றியக்குழு தலைவர்கள் சங்கீதாபாதி, சத்யா, ஜெயின் அறக்கட்டளை தலைவர் விமல்சந்த், கல்லூரி செயலாளர் லிக்மி சந்த், அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் எஸ் பசுபதி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment