திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடியிருப்பதற்காக அரசு சார்பில் வளையாம்பட்டு கூத்தாண்டவர் கோவில் அருகே மலையை ஒட்டி இடம் கொடுத்துள்ளனர்.
இதற்காக திருநங்கைகள் தங்கள் சொந்த பணம் சுமார் 2 லட்சம் ரூபாய்க்கு மேலாக செலவு செய்து அந்த இடத்தை குடியிருப்பு கட்டுவதற்காக தயார் செய்து வைத்துள்ளனர். ஆனால் தற்போது அந்த இடம் உங்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்று வட்டாட்சியர் சம்பத் தெரிவித்ததால் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து வட்டாட்சியர் சம்பத் மற்றும் நகர போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் திருநங்கைகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
No comments:
Post a Comment