திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் இரயில்வே பாதையை பொது மக்கள் கடந்து செல்வதற்காக கீழ்பாலம் அமைக்கப்பட உள்ளதை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளருமான தென்காசி.எஸ். ஜவகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது
தொகுதி மக்களின் நீண்ட ஆண்டுகள் கோரிக்கையான ரியிவே சுரங்கபாதை அமைக்கும் பணியை விரைவில் பூமி பூஜையுடன் தொடங்க நடவடிக்கை எடுக்கபடும் என்றார்.
முன்னதாக நகராட்சி துவக்க பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டியை மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு பின்னர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரூ.1 கோடி 8 லட்சம் செலவில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் கழிவு நீர் கால்வாய் தூர் வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வு பணியின் போது மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்துணவு சீனிவாசன், வட்டாட்சியர் சம்பத், நகராட்சி ஆணையாளர் மாரி செல்வி உட்பட உள்ளிட்ட உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment