ஆம்பூர் அண்ணா பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணா பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, சோசியல் டெமோகிரட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், தந்தை பெரியார் திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினர் இதில் ஒருபோதும் தமிழகத்தில் சங்பரிவார் கும்பல் கால் ஊன்ற முடியாது என்று கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment