வாணியம்பாடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 11 October 2022

வாணியம்பாடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், பாசிசத்துக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.


போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் வெங்கடேசன் தலைமை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் எஸ்.டி.நிசார் அஹமத், நகர தலைவர் எஸ்.எஸ்.பி பாரூக் அஹமத், மதிமுக நகர செயலாளர் நாசீர் கான், காங்கிரஸ் கட்சி வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கதிர் அஹமத், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி மாநில பொறுப்பாளர் டி.எஸ்.வக்கீல் அஹமத், மனிதநேய மக்கள் கட்சி நகர தலைவர் சையத் ஜாவித் அஹமத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

போராட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையாக நின்று கைகளை கோர்த்துக் கொண்டு மதநல்லிணக்கத்தை வலியுறுத்தியும், பாஜக அரசு மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர செயலாளர் நரி முஹம்மத் நயீம், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆர்.முல்லை, இந்துமதி, வெல்ஃபர் பார்ட்டி ஆப் இந்தியா  மாவட்ட செயலாளர் ஃபசி அக்ரம், நகர தலைவர் ஐயூப், மாநில மகளிர் அணி செயலாளர் ஆலியான் நிக்கத், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் இக்பால் அஹமத், புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்த பிரதாபன், கோபி, எஸ்.டி.பி.ஐ கட்சியினர், நகர மன்ற உறுப்பினர்கள் அனீஸ் அஹமத், கலீம் பாஷா, பஷீர் அஹமத், உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad

*/